» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் குழந்தைகளுக்கான ஓவிய போட்டி!

திங்கள் 18, நவம்பர் 2024 3:35:55 PM (IST)



தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் நடைபெறும் குழந்தைகள் தினவிழா ஓவியப் போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். 

தென் தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி மற்றும் சென்னை செம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில்  தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இயங்கி வரும் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 1, 2, மற்றும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கையின் வண்ணம், வண்ண பறவைகள், சிந்தனை பேசும் சித்திரம் ஆகிய தலைப்புகளிலும், 4, 5, மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என் சுற்றுப்புறம் என் பொறுப்பு, வளர்ச்சி இந்தியா, உலகம் போற்றும் எங்கள் கலாச்சாரம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. 

ஓவியப் போட்டியில் சுமார் 2ஆயிரம் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் தங்களது கைவண்ணத்தை வரைந்து குடும்பத்துடன் கே.சின்னத்துரை அன் கோ வருகைபுரிந்து நிறுவன பங்குதாரர் அரி.ராமகிருஷ்ணனிடம் வழங்கி வருகின்றனர். இந்த போட்டியின் பரிசளிப்பு விழா வருகிற 25ஆம் தேதி தூத்துக்குடி கே.எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

சித்தவராஜ் ப கோவில்பட்டிNov 22, 2024 - 03:45:40 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் சின்னத்துறை அண்ட் கோ கடை உரிமையாளர் அவர்களுக்கு

கனிராஜ்Nov 19, 2024 - 07:25:54 PM | Posted IP 172.7*****

Super Sir

ராஜாராம்Nov 18, 2024 - 07:29:59 PM | Posted IP 172.7*****

நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory