» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளமடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல்

திங்கள் 18, நவம்பர் 2024 11:33:05 AM (IST)



நாசரேத் அருகே வெள்ளமடம் ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் வெள்ளமடம் ஊராட்சி வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை வகித்தார். வெள்ளமடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜேஸ்மின் வடிவேல் முன்னிலை வகித்தார். விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். 

இதில்  ஆழ்வாா்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்  சிவராமன், வட்டார  தலைவர் கோதண்டராமன், வாலசுப்பிரமணியபுரம் ஊர் நாட்டாமை கதிர்வேல், ஊராட்சி செயலாளர் வேதமாணிக்கம் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory