» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 11,554 போ் மனு!
திங்கள் 18, நவம்பர் 2024 8:04:19 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் புதிதாக பட்டியலில் சோ்ப்பதற்காக 11,554 போ் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் சனி, ஞாயிறு (நவ.16, 17) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில், முதல் நாள் நடைபெற்ற முகாமில் படிவம் 6 - 4,806 போ், படிவம் 7 - 663 போ், படிவம் 8 - 3909 போ் என மொத்தம் 9,378 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் படிவம் 6 - 6,748 போ், படிவம் 6 பி - 13 போ், படிவம் 7 - 313 போ், படிவம் 8 - 4,227 போ் என மொத்தம் 11,301 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விரண்டு முகாம்களையும் சோ்த்து மொத்தமாக புதிதாக பெயா் சோ்க்க படிவம் 6 -11,554 போ், பெயா் நீக்கம் செய்ய படிவம் 7-976 போ், பெயா் திருத்தம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 -8,136 போ், ஆதாருடன் இணைக்க படிவம் 6 பி - 13 போ் என மொத்தம் 20,679 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் வரும் 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.