» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்: மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்!
ஞாயிறு 17, நவம்பர் 2024 6:33:10 PM (IST)
தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 45 நிமிடம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு தினசரி மாலை 5:20 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுகிறது இதில் குளிர்சாதன பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 11 பொதுபெட்டிகள் 4 ஆக மொத்தம் 23 பெட்டிகளுடன் செல்லும். இன்று 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திடீரென குளிர்சாதனப்பெட்டி ஒன்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றும் திடீரென குறைக்கப்பட்டது.
குளிர்சாதன பெட்டியில் செல்வதற்கு 42 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இரண்டாம் வகுப்பு பி2 பெட்டியில் 14 பேர் முன் பதிவு செய்திருந்தனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலை கொண்டு நிற்கிறோம். தாங்கள் ஏற வேண்டிய கோச் இல்லாததால் பயணிகள் அலைமோதினர். இறுதிவரை தாங்கள் ஏறி வேண்டிய கோச் இணைக்கப்படாத திடீரென பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்
பயணிகளிடம், பணத்தை ரிட்டன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ரயில் நிலைய அதிகாரிகள் கூறினர். ஆனால், நாங்கள் ஊருக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். எங்களுக்கு பணம் வேண்டாம் பெட்டிகளை இணையுங்கள் என்று பயணிகள் கோஷமிட்டனர். பின்னர் அனைத்து பயணிகளும் காலியாக இருந்த பெட்டியில் ஏறி பயணம் செய்ய தயாராகினார்கள். இதனால் மாலை 5.20க்கு புறப்பட வேண்டிய ரயில் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. பயணிகள் போராட்டத்தால் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
என்னதுNov 17, 2024 - 06:52:20 PM | Posted IP 162.1*****