» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேருந்து நிலையத்தில் 10 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
வியாழன் 7, நவம்பர் 2024 11:54:12 AM (IST)
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 10 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் தர்மலிங்கம் (77). இவர் கடந்த 4ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உள்ள தனது மகன் புதுமனை புகுவிழா வீட்டுக்கு வந்தாராம். பின்னர் ஊருக்கு செல்வதற்காக திருச்செந்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் இவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது குறித்து தர்மலிங்கம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)
