» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
வியாழன் 7, நவம்பர் 2024 11:26:12 AM (IST)
குரும்பூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சுந்தரமூர்த்தி (35). இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்காததால் மனவிரக்தியில் இருந்தாராம்.
இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
paithiyamNov 7, 2024 - 03:22:12 PM | Posted IP 162.1*****