» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 7, நவம்பர் 2024 11:17:40 AM (IST)
தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள உமரிக்கோட்டை வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமமூர்த்தி (25), இவர் கடந்த ஒன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்ப இல்லை. குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றபோது அங்குள்ள காட்டுப் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வைரஸ் வழக்கு பதிவு செய்து, அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.