» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அழகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்: தூத்துக்குடியில் சஷ்டிவிழா கோலாகலம்!
வியாழன் 7, நவம்பர் 2024 10:38:54 AM (IST)
தூத்துக்குடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருக பக்தர்கள் அழகு குத்தியும், காவடி எடுத்து பால்குட ஊர்வலம் சென்றும் வழிபட்டனர்.
இன்று முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்காரம் கந்த சஷ்டி திருவிழா முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி எஸ்எஸ் தெரு பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் கடந்த ஆறு நாட்களாக கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சூரசம்காரம் நடைபெறுகிறது.
இன்று காலை கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் முருகனை நினைத்து வேண்டி தங்கள் வாயில் ஆறுஅடி முதல் ஒரு அடி வரையிலான அழகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் எடுக்கும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் தூத்துக்குடி தெப்பக்குளத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் துவங்கி, சங்கர ராமேஸ்வரர் ஆலயம் வழியாக முருகன் ஆலயத்தை அடைந்தது. அங்கு அவருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.