» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 10ஆம் தேதி இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்
வியாழன் 7, நவம்பர் 2024 10:23:30 AM (IST)
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் வருகிற 10ஆம் தேதி இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு டாக்டர் அருள்ஸ் சர்க்கரை நோய் நிலையம் மற்றும் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் 17வது ஆண்டு இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை வளாகத்தில் வருகிற 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
16 வருட அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் தலைமையில் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படும். இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, HbA1C பரிசோதனை, முழு கொழுப்பு அளவு பரிசோதனை, பாதம் (பயோதிசியோமீட்டர்) பரிசோதனை, உணவு முறை மற்றும் உடற்பயிற்சி செய்முறை ஆலோசனை, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, கண் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
பரிசோதனைக்கு வருபவர்கள் பழைய ரிப்போர்ட்டை கொண்டு வர வேண்டும். சாப்பிடாமல் வர வேண்டும். காலை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். முன்பதிவுக்கு 95009 84478 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சர்க்கரை சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவர் சிறப்பு மருத்துவர் ஆரத்தி கண்ணன் தெரிவித்துள்ளார்.