» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே மின்னல் பாய்ந்து பெண் பலி!
வியாழன் 31, அக்டோபர் 2024 9:06:46 AM (IST)
தூத்துக்குடியை அருகே பேரூரணியில் பலத்த மழையின்போது, மின்னல் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணியைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி அன்னதங்கம் (47). இவர் உள்ளிட்ட சிலர், நேற்று ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைக்கு சென்றனர். அப்போது, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அவர்கள் அங்குள்ள மரம் அருகே ஒதுங்கினராம். அந்த மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களில், அன்னதங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்பேரில், தட்டப்பாறை போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)









m.sundaramOct 31, 2024 - 07:18:51 PM | Posted IP 162.1*****