» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திங்கள் 30, செப்டம்பர் 2024 10:57:58 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93 மிமீ மழை பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயிலும் தலைகாட்டியது. பின்னர் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

மேலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மிமீ): தூத்துக்குடியில் 20, ஸ்ரீவைகுண்டம் 64, திருச்செந்தூர் 55, காயல்பட்டினம் 93, குலசேகரபட்டினம் 18, சாத்தான்குளம் 26, கோவில்பட்டி 8, கழுகுமலை 14, கயத்தார் 67, கடம்பூர் 40, எட்டயபுரம் 5.20, விளாத்திகுளம் 20, சூரங்குடி 6, ஓட்டப்பிடாரம் 46, மணியாச்சி 65, வேடநத்தம் 26, கீழ அரசரடி 10 என மாவட்டத்தில் மொத்தம் 583.20 மிமீ மழை பெய்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory