» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டில் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

திங்கள் 9, செப்டம்பர் 2024 5:32:09 PM (IST)



வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று தமிழ்நாட்டில் தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சரும், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பெ.கீதாஜீவன் பேசியதாவது: தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 2019 மக்களவைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் பா.ஜனதா மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே போல், நாட்டில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. உயர்ந்துள்ளது. அதற்கு திட்டமிட்டு வியூகம் அமைத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின். அதனை செயல்படுத்தியவர்கள் நீங்கள் தான்.

இதேபோன்று, வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தலைவர் இலக்காக அறிவித்துள்ளார். அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். தொடர்ச்சியாக 2-வது முறையாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராக பதவியேற்று சரித்திர சாதனை படைக்க உள்ளார். அ.தி.மு.க.வில் பங்காளி சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எந்த கட்சி வந்தாலும், தி.முக.வின் வாக்குவங்கி குறைய வாய்ப்பில்லை. தி.மு.க.வின் வாக்குகள் ஒருகாலமும் பிரியாது. எனவே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி நமது பணிகள் இருக்க வேண்டும். அத்தேர்தலில் நமது கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் உட்பட கிளை செயலாளர்கள் விளாத்திகுளம் பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

நிர்வாகிSep 11, 2024 - 03:38:50 PM | Posted IP 172.7*****

வேற வழி, அப்பாவிகளே ஏதாவது சொல்லி உருட்டுவது தான் அவர்கள் வேலை.

அப்பாவிSep 10, 2024 - 02:04:39 PM | Posted IP 172.7*****

இன்னுமா நீட் ஒழிக்க போறேன் சொல்லி ஏமாத்திட்டு இருக்காங்க

inbaSep 10, 2024 - 08:28:31 AM | Posted IP 162.1*****

good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory