» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாற்கர சாலையில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
வியாழன் 5, செப்டம்பர் 2024 8:37:31 AM (IST)

கயத்தாறு அருகே நாற்கர சாலையில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து விபத்துக்குள்ளானது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆனைகுழி அருள்குன்று நகரைச் சேர்ந்த விவசாயி அருள்தாஸ் மகன். அல்ஜின்கிப்ட் (45). இவர் டாரஸ் லாரியில் நாகர்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு பழைய பஸ், லாரி டயர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். லாரியில் சுமார் 20 டன் டயர்கள் இருந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன் குளம் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பாலத்திலிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கயத்தாறு சுங்கச்சாவடி கிரேட், பணியாளர்கள் லாரியை சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தி. போக்குவரத்தை சரி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
