» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பரோட்டா கடைக்காரர் : தூத்துக்குடியில் கொடூரம்!

புதன் 4, செப்டம்பர் 2024 12:50:50 PM (IST)



தூத்துக்குடியில் நாய் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பரோட்டா கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் ராமையா லாட்ஜ் அருகே தனியாருக்கு சொந்தமான பரோட்டா கடை உள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த கடை அருகே ஒரு தெருநாய் படுத்திருந்தது. இதையடுத்து அந்த நாய் மீது கடை நிர்வாகிகள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது. 

இதனால் அந்த நாய் வலியில் கதறி துடித்தது. நாயின் சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அங்கு சென்று கடைக்காரர்களை கண்டித்துள்ளனர். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சுார்த்தைக்கு பின்னர் அந்த நாய் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  மனித நேயமற்ற இச்செயலை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

தமிழன்Sep 6, 2024 - 11:26:17 AM | Posted IP 172.7*****

எண்ணெயோ தண்ணியோ நாய்க்கு சொல்ல தெரியாது.சம்பவத்தை செய்த மனிதர்களுக்குதானே தெரியும்.

BabuSep 5, 2024 - 03:37:11 PM | Posted IP 172.7*****

Naai kuruka vanthu palar vilunthu sagum pothu ivanga yellam yenga poiruvangalo

SeenivasagamSep 5, 2024 - 12:50:40 AM | Posted IP 162.1*****

சரவணாதி vs ஆழ்வார்

ராஜாராம்Sep 4, 2024 - 10:24:06 PM | Posted IP 172.7*****

சிசி டிவி பார்த்தால் உண்மை தெரியவரும். யாராக இருந்தாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

VIGNESHSep 4, 2024 - 10:00:32 PM | Posted IP 172.7*****

சம்பவம் கேள்விபட்டு மத்திய சங்க நிர்வாகிகள் அங்கே சென்று பார்த்த போது அங்கே அப்படி அந்த நாய் மீது கொதிகின்ற எண்ணெய் ஏதும் ஊற்றியது போல் இல்லை.அது சாதாரணமாக ஓடி சென்று கொண்டிருந்தது.பணம் பறிக்கும் நோக்கம் கொண்டு ஒரு கும்பல் வியாபாரிகளுக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.

ஜெயக்குமார் தூத்துக்குடிSep 4, 2024 - 08:51:39 PM | Posted IP 162.1*****

மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்த கடை ஏரியாவில் வியாபாரி சங்கத்தில் செயலாளராக உள்ள நான் ஞாபகம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அந்த இடத்தில் சென்று நான் நேரில் பார்த்த விஷயங்களை இப்போது கூறுகிறேன் அதாவது அந்த நாயானது அந்த புரோட்டா கடைக்குள் நுழை முற்படும்போது அந்த கடையின் ஊழியர்கள் அதன் மீது தண்ணீர் ஊற்றி உள்ளார்கள் அதனால் அது வேகமாக சாலையை நோக்கி ஓடி வரும் போது சாலையில் வந்த ஒரு வாகனம் லேசாக மோதியதில் சிறு சத்தம் போட்டு உள்ளது ஆகவே அந்த இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுதான் நடந்த சம்பவம் தற்போது அந்த நாய் சோதனை செய்து பார்க்கும்போது அதன் மீது எந்தவித காயமும் எதுவும் இல்லை அந்த நாய் நன்றாக உள்ளது அதை அதனுடைய வீடியோ ஆதாரம் என்னிடம் எங்களிடம் உள்ளது ஆகவே இந்த சம்பவம் ஆனது ஏதோ தொழில் போட்டி காரணமாக வேண்டுமென்றே செய்வது போன்று தோன்று தோன்றுகிறது ஆகவே இது போன்ற சம்பவங்கள் புரோட்டா கடைக்குள் நுழையும் நாயை உள்ளே வந்து சாப்பிட்டு விட்டு செல் என்று சொல்ல முடியுமா அதற்காக வெளியே வரட்டும் விதமாக தண்ணி தான் ஊற்றி உள்ளார்கள் என்பதுதான் உண்மை நன்றி

A.Jeyakumar secretary managara vatta theppam paguthi merchants associationSep 4, 2024 - 08:16:02 PM | Posted IP 162.1*****

வணக்கம் மேரி குறிப்பிட்ட சம்பவம் தூத்துக்குடி சிலை அருகில் உள்ள ஒரு கடையில் நடைபெற்றது நான் மேற்படி கடை உள்ள பாகத்தின் வியாபாரிகள் சங்கத்தில் செயலாளர் இந்த சம்பவம் நடைபெற்று விஷயத்தை தகவல் கேள்விப்பட்டு சிறிது நேரத்தில் அங்கு நேரில் சென்று பார்த்த போது மேற்படி நாய் கடைக்குள் நுழைய முற்படும்போது கடையின் ஊழியர்கள் அதன் மீது தண்ணீரை ஊற்றி விரட்டி உள்ளார்கள் அப்போது அது சாலையில் ஓடி வரும் போது எதிரே வந்த பைக்கின் மீது மோதி சத்தமிட்டுள்ளது ஆகவே அந்த இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுதான் நடந்த விஷயம் இப்போது அந்த நாய் மிகவும் நன்றாக உள்ளது அங்கங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறது அந்த நாய் மீது எந்தவித காயமும் ஏற்படவில்லை ஆகவே இந்த செய்தி என்பது தவறான செய்தி இது தொழில் போட்டி காரணமாக சிலர் செய்கிற சதி மாதிரி தெரிகிறது அவ்வாறு சரி செய்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் இவன் மாநகர வட்டத்தப்பம் பகுதி வியாபாரிகள் சங்கம் தூத்துக்குடி எனது பெயர் ஜெயக்குமார்

தமிழன்Sep 4, 2024 - 07:40:50 PM | Posted IP 162.1*****

உலகம் மிகவும் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது.பாவம் ,பரிதாபம்,இரக்கம்,மனிதநேயம் எல்லாம் செத்துவிட்டது.

VigneshSep 4, 2024 - 07:32:59 PM | Posted IP 172.7*****

சம்பவம் கேள்விபட்டு மத்திய சங்க நிர்வாகிகள் அங்கே சென்று பார்த்த போது அங்கே அப்படி அந்த நாய் மீது கொதிகின்ற எண்ணெய் ஏதும் ஊற்றியது போல் இல்லை.அது சாதாரணமாக ஓடி சென்று கொண்டிருந்தது.பணம் பறிக்கும் நோக்கம் கொண்டு ஒரு கும்பல் வியாபாரிகளுக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.

ராஜாSep 4, 2024 - 07:03:48 PM | Posted IP 162.1*****

தொழிலில் போட்டி மற்றும் வேண்டும் என்றே வியாபாரிகளிடம் பணம் பறிக்க கும்பல்கள் கிளம்பியுள்ளது போலவே தெரிகிறது. நானும் அந்த இடத்திற்கு விரைந்து சென்றேன். அந்த நாய் மீது காயங்கள் ஏதும் இல்லை. மேலும் அந்த நாய் சாதாரணமாக நடத்து சென்று பிஸ்கட் சாப்பிட்டது. அதனை வீடியோவும் எடுத்து வைத்துள்ளோம்... தெரு நாய் மீது தண்ணீர் ஊற்றப்பட்டதா என்று தெரியவில்லை... கொதிக்கும் எண்ணையை ஊற்றினால் காயம் ஆகி இருக்கும்.

kannanSep 4, 2024 - 05:24:23 PM | Posted IP 172.7*****

சரவனதி புரோட்டா கடை தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory