» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கன்னியாகுமரி – தூத்துக்குடி பகல் நேர பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 5:00:34 PM (IST)
கன்னியாகுமரி – தூத்துக்குடி இடையே பகல் நேர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, புனலூர் கொல்லம் வழியாக பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நீட்டிப்பு, திருநெல்வேலி, தென்காசி, கொல்லம் மாவட்டத்தில் உள்ள பயணிகள் துறைமுக நகரமாக தூத்துக்குடி நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது.
ஆனால் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதி பகுதியில் உள்ள மக்களுக்கு தூத்துக்குடி நேரடியாக செல்ல வேண்டும் என்றால் தற்போது எந்த ஒரு ரயில் வசதியும் இல்லை. ஏதாவது ஒரு ரயிலில் திருநெல்வேலி சென்றுவிட்டு பின்னர் தூத்துக்குடி செல்லலாம் என்றாலும் கால அட்டவணை பொருந்தும் வகையில் எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை.
நிறுத்தப்பட்ட கன்னியாகுமரி – தூத்துக்குடி பயணிகள் ரயில்: தூத்துகுடியிலிருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு பயணிகள் ரயில் 1999-ம் ஆண்டு இயக்கப்பட்டு வந்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி சென்றால் குறைந்த கால அளவில் பேருந்துகளில் சென்றுவிட முடியும். ஆனால் கன்னியாகுமரி – தூத்துக்குடி ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடி சுற்றுப்பாதையில் ஒருவழிப் பாதையில் சென்று வந்தது. இது மட்டுமல்லாமல் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு இஞ்சின் மாற்றுவது 15 முதல் 30 நிமிடங்கள் வரை எடுத்து கொண்டது.
அந்த காலகட்டத்தில் போதிய பயணிகள் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் போதிய பயணிகள் இன்றி காலியாக இயக்கப்பட்டது. இந்த காரணத்தால் ரயில்வே துறையால் இந்த ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது நிலை முழுவதும் மாறிவிட்டது. நாகர்கோவில் டவுன் முதல் தூத்துக்குடி வரை உள்ள பாதை இருவழிப்பாதையாக மாற்றம் பெற்றுவிட்டது. இது மட்டுமல்லாமல் வாஞ்சி மணியாச்சியில் பைபஸ் லைன் பயணிகள் ரயில்கள் இயக்கத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்ஜின் மாற்றி இயக்க வேண்டிய பிரச்சனை இல்லை. எனவே இந்த தூத்துக்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று இந்த மூன்று மாவட்ட பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு இந்த ரயிலை இயக்கும் போது இந்த ரயில் திருவனந்தபுரம் மாவட்ட பயணிகள் வசதிக்காக கொச்சுவேலியிருந்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்துடன் நேரடியாக தூத்துக்குடி ரயில் வசதி கிடைக்கும். இது மட்டும் இல்லாமல் கொச்சுவேலியிருந்து வடஇந்தியாவில் இயக்கப்பட்டு பல்வேறு ரயில்களில் இணைப்பு ரயிலாகவும் இருக்கும்.
நீட்டிப்பு: கொச்சுவேலியிருந்து காலையில் புறப்படும் படியாக நாகர்கோவிலுக்கு தற்போது பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறு மார்க்கமாகவும் மாலை நாகர்கோவிலிருந்து கொச்சுவேலிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்து கொச்சுவேலி – தூத்துக்குடி என்று இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
எக்ஸ்பிரஸ் கட்டணம் மாற்ற வாய்ப்பு: ரயில்வே துறை 200 கி.மீக்கு மேல் இயங்கும் பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கி வருகிறது. இதற்கு முன்பு செங்கோட்டை – மதுரை மற்றும் திண்டுக்கல் - மயிலாடுதுறை ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக இயக்கிய போது செங்கோட்டை – மதுரை மார்க்கத்தில் இயங்கிய ரயில் எக்ஸ்பிரஸ் கட்டண ரயிலாக மாற்றம் பெற்றது.
கொச்சுவேலியிருந்து தூத்துக்குடிக்கு இயக்கும் போது தூரம் இவ்வாறு வருகிறது.
திருவனந்தபுரம் - தூத்துக்குடி
திருநெல்வேலி – தூத்துக்குடி – 58.5 கி.மீ
திருநெல்வேலி – திருவனந்தபுரம் -142.8
மொத்த தூரம் 201.3 கி.மீ
கொச்சுவேலி -- தூத்துக்குடி
திருநெல்வேலி – தூத்துக்குடி – 58.5 கி.மீ
திருநெல்வேலி – கொச்சுவேலி -150 கி.மீ
மொத்த தூரம் 208.5 கி.மீ
இவ்வாறு இயங்கும் போது எக்ஸ்பிரஸ் கட்டண ரயிலாக மாற்றம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இரண்டு ரயில்காளாக இயக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொச்சுவேலி – திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் ரயில் என்று இரண்டு ரயிலாக இயக்கலாம் என்ற ஆலோசனையும் ரயில்வே துறையிடம் வைக்கப்படுகின்றது.
மக்கள் கருத்து
VijiAug 18, 2024 - 09:36:05 AM | Posted IP 162.1*****
Coimbatore to Nagercoil oru rail iruntha Nalla irukum via pollachi udumalai Palani dindigul madurai....
James patrisonAug 17, 2024 - 09:46:54 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி - வாஞ்சி மனியாச்சி மற்றும் வாஞ்சி மனியாச்சி - திருசந்தூர் வரை இருக்கும் இரண்டு ரயில்லை ஓரே ரயில்லாக இயங்கவேண்டும் இதனால் வாஞ்சி மனியாச்சயில் இரண்டு மணிநேரம் நிருதிவைக்க வேண்டியது இல்லை இதன் மூலம் பல ரயில் பயணிகள் தூத்துக்குடியில் இருந்து நாரைகினறுக்கு செல்ல மிகவும் உதவியாக இருக்கும் இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து காலை 8:25 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மனியாச்சிக்கு 9:10 மணிக்கு வந்துசேரும் பிறகு வாஞ்சி மனியாச்சயில் இருந்து 10:00 மணிக்கு புறப்பட்டு திருசந்தூர் னொக்கி செல்லவேண்டும்
GengusamyAug 17, 2024 - 01:25:04 PM | Posted IP 172.7*****
Yes We need Train from Tuticorin to Thiruvananthapuram (Kochuveli)
கணபதி அழகப்பன்Aug 17, 2024 - 11:50:53 AM | Posted IP 172.7*****
தூதுக்குடி-திருச்செந்தூர்-வள்ளியூர் மார்க்கமாக திருவனந்தபுரம் வரை ரயில் விடுவது மிகவும் பயன்தரும். நாசரேத்-வள்ளியூர், தூத்துக்குடி -ஆறுமூகநேரி புதிய தண்டவாள அமைப்பு திட்டம் நேரம்-காலம்-பனவரவு-மக்கள்நலன்-துறைமுகவரவு-முன்னேற்றத்திற்கு மிகமிக உதவியாக இருக்கும்.
பி.கண்ணாAug 17, 2024 - 01:01:41 AM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலை வாஞ்சிமணியாச்சி பைபாஸ் பாதையில் நாகர்கோயில் (அல்லது)திருவனந்தபுரம் வரை நீட்டித்தால் 3 மாவட்டமக்களும் பயன்பெறுவார்கள் அல்லது மெமுரயிலாக விட்டாலும் மகிழ்ச்சியே மக்களின் கோரிக்கை நிறைவேற்றுமா ரயில்வே நிருவாகம்
BalamuruganAug 16, 2024 - 07:39:21 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலை திருவனந்தபுரம் வரை விடலாம் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு பஸ்ஸில் பயணம் செய்தால் வெறும் 40 கி.மீ. ரயிலில் 120 கி.மீ. பயணிக்கவேண்டியுள்ளது .
ஹென்றிAug 16, 2024 - 04:01:49 PM | Posted IP 162.1*****
கண்டிப்பாக தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் விட வேண்டும்.தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யலாம்
John RatchanyamAug 16, 2024 - 03:44:40 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் ஓடியதாக நினைவில்லை நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரம் இணைப்பு மிக பயனுள்ளதாக இருக்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் 15 நேரம் நிற்கப் போகிறது அந்த பெட்டிகளை rake sharing செய்யலாமே
SakthiAug 16, 2024 - 07:05:51 AM | Posted IP 162.1*****
Kochuveli - tuticorin direct train a ve run pannalam
Kochuveli la irunthu north side pore train ku connect pandre mathri vitta, rmb nalla irukum
ArumugamAug 15, 2024 - 08:47:56 PM | Posted IP 172.7*****
நாகர்கோவில் Toகோவை செல்லும் முன்பதிவில்லாத வண்டியை வாஞ்சிமணியாச்சி நிலையத்திற்கு காலை9.38A.m வருகிறது.மைசூர்Toதூத்துக்குடி வண்டி வாஞ்சிமணியாச்சி நிலையத்திற்கு காலை9.30A.m வருகிறது. இந்த வண்டி வரும் நேரத்திற்கு தகுந்தாற் போல் நாகர்கோவில் Toகோவை முன்பதிவில்லாத வண்டி நேரத்தை மாற்றி அமைத்தால் தென்மாவட்ட மக்கள் தூத்துககுடிக்கு செல்ல ஏதுவாக அமையும். நன்றி
ஆறுமுகம்Aug 15, 2024 - 08:20:29 PM | Posted IP 162.1*****
நாகர்கோவில் To கோவை செல்லும் காலை 9.38A.m வாஞ்சிமணியாச்சி நிலையத்திற்கு வருகிறதுமுன்பதிவில்லாத வண்டி.மேலும் காலை 9.30A.m மணிக்கு மைசூர்To தூத்துக்குடி வண்டி வாஞ்சி மணியாச்சி நிலையத்திற்கு வருகிறது. இந்த வண்டி நேரத்தையோ அல்லது நாகர்கோவில் Toகோவை முன்பதிவில்லாத வண்டி நேரத்தையோ மாற்றியமைத்தால் தென்மாவட்ட மக்கள் கன்யாகுமரி Toதூத்துக்குடி செல்ல பபன் உள்ளதாக அமையும். நன்றி
மு.பிச்சாண்டிAug 20, 2024 - 01:36:11 PM | Posted IP 162.1*****