» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் 78வது சுதந்திர தினவிழா

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 4:45:17 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 78வது சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ப. அகிலன்  தேசிய கொடியை ஏற்றினார். இக்கல்லூரியின் ஆசிரியர்கள்;, அலுவலக பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் முதல்வர்  தனது சுதந்திர தின உரையில் முக்கிய அம்சங்களான சுதந்திர போராட்டம், யோசனைகள், தீர்வுகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றில் இந்தியாவின் முன்னேற்றம் நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதனோடு விவசாயம் மற்றும் மீன்வளத்தில் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். 

மேலும் மீன்வளப் பல்கலைக்கழத்தின் சாதனைகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த தியாகிகளை போற்றி நினைவுகூர்ந்தார். இன்றைய காலக்கட்டத்தில் நாட்டுப்பற்றை எடுத்துரைத்து பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வலியுறுத்தினார். இவ்விழாவில் முதலாம் ஆண்டு இளங்கலை மீன்வள அறிவியியல்; மாணவி செல்வி ஹமீனா ரோசன் மற்றும் பபினா செர்லின் முறையே ஆங்கிலம் மற்றும் தமிழில் சுதந்திர தின உரை நிகழ்த்தினர். 

இதனிடையே பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ஷ்ட கட்டம் போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தமிழ் மற்றும் ஆங்சிலம் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் சான்றிழ்கள் வழங்கப்பட்டது. நிறைவாக இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவினை உதவி உடற்கல்வி இயக்குநர் முனைவர் த.நடராஜன்  மற்றும் விளையாட்டு செயலாளர் கே.எஸ்.விஜய் அமிர்தராஜ் ஆகியோர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory