» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வெளித்துறைமுகம் மதிப்பாய்வு செயல்பாடுகள்: ஆணைய தலைவர் தகவல்!
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 4:01:37 PM (IST)
தூத்துக்குடியில் வெளித்துறைமுக திட்டத்திற்குகான மதிப்பாய்வு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று துறைமுக ஆணையம் தலைவர் சுசந்த குமார் புரோகித் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 78வது சுதந்திர தின விழா துறைமுக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. துறைமுக ஆணையம் தலைவர் சுசந்த குமார் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் துறைமுக தீயணைப்புப் படை வீரர்கள், துறைமுக பள்ளி மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் ஆற்றிய உரையில், விரைவில் துறைமுகத்தில் 6 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாளும் வசதியுடன் கூடிய 9வது பொது சரக்குதளத்தினை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல் மற்றும் ஆண்டிற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளத்தினை முழுமையாக இயந்திரமயமாக்கல் மற்றும் மிதவை ஆழம் 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி போன்ற வளர்ச்சி திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளதை உங்களுடன் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ளுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
மேலும் அவர் பாரத பிரதமர் அவர்களால் பிப்ரவரி மாதம் 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கனவு திட்டமான வெளித்துறைமுக திட்டத்திற்குகான மதிப்பாய்வு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 Nm3 திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நவம்பர் 2024 துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன், அமோனியா, மெத்தனால் சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் பணி டிசம்பர் 2025 ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.
துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், துறைமுக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், துறைமுக ஊழியர்களின் குழந்தைகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். துறைமுக பள்ளிகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல்வேறு பாதுகாப்பு செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டினார்கள். விழாவில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர் , வி. சுரேஷ் பாபு, மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
டேவிட்ராஜ்Aug 15, 2024 - 04:37:06 PM | Posted IP 162.1*****
நான் ஊரிண் நன்மை கருதி பொட்டலூரணி கிராமசபை கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்,
பாவம்Aug 16, 2024 - 11:08:57 AM | Posted IP 162.1*****