» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் சுதந்திர தினவிழா!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 3:52:40 PM (IST)



ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் முதல் முதலாக தேசிய கொடியேற்றி, சுதந்திர தினவிழா நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல்தளம்  உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த தொல்லியல் தளத்தில் கடந்த  வருடம் ஆகஸ்ட் 5 தேதி கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியத்தினை திறந்து வைத்தார்.  உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதற்கிடையில் கடந்த 6மாத காலமாக ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாமல் தொய்வு ஏற்பட்டது. 

இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் வருத்தமடைந்தனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுக்கு மனு கொடுத்து வந்தனர். தற்போது ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில்  மீண்டும் பணியாளர்கள் நியமனம் செய்து, இந்த மியூசியம் மிகச்சிறப்பாக நடைபெற  மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆதிச்சநல்லூரில் சுதந்திரதினவிழா நடந்தது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழரில்  பெருமையை பறைசாற்றும்  ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் முதல் முதலாக தேசிய கொடியேற்றி, சுமார் 1000  மூவர்ண பலூன்களை சைட் முழுவதும் பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சி கண்ணை கவருவதாக இருந்தது.  முன்னதாக  தேசிய கொடியை  ஆதிச்சநல்லூர் பராமரிப்பு தொல்லியல் அலுவலர் சீதா ராமன் ஏற்றி வைத்தார்.  

ஆதிச்சநல்லூர் சைட் பல்நோக்கு பணியாளர்கள் வெங்கடேஷ், அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளி, சிறுதொண்ட நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 100 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பி சைட் மியூசியத்தில் இருந்து சி சைட் மற்றும் தொல்லியல் தளங்களை சுற்றி பேரணி நடத்தினர்.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு மத்திய தொல்லியல் துறையினர் சுதந்திர தின விழாவை நடத்தி  பள்ளி மாணவ மாணவர்களை கொண்டு 1000 மூவர்ண பலூன்களை  பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய  மத்திய தொல்லியல் துறையினர் தொல்லியல் ஆர்வலர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory