» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டபொம்மன் வேடத்தில் வந்த கல்லூரி மாணவி : கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 3:22:02 PM (IST)



தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கல்லூரி மாணவி வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் இன்று ஜோதிபாசு நகர் எனும் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டார்கள் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார் 

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஏபிசி கல்லூரியில் மூன்றாவது ஆண்டு வேதியல் பிரிவில் கல்வி பயின்று வரும்மாணவி சந்தியா தங்கள் பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர் இந்த மக்களில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு குடியிருப்பு மனைகளுக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை இதனை பல்வேறு கூட்டங்களில் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஏனென்றால் மேற்படி ஊராட்சியானது தூத்துக்குடியில் இருந்து 16 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் பட்டா வழங்கக் கூடாது என்ற தடையானை அரசால்ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டா வழங்க மார்க்கமில்லை என்ற நிலை இருந்து வந்தது. 

இதனை கருத்தில் கொண்ட மாணவி சந்தியா ஓட்டப்பிடாரம் சுதந்திரப் போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில்தடையானையை நீக்கி பட்டா வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் சரவணகுமார் அவர்களை சந்தித்து மனு அளித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory