» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுதந்திர தினவிழாவில் எழுத்தாளர்கள் கௌரவிப்பு
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 3:17:04 PM (IST)
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் லட்சுமிபதி எழுத்தாளர்களை கௌரவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தேசிய கொடியை ஏற்றி வைத்து 51 பயனாளிகளுக்கு 1,14,79,790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 228 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
இந்த வருடம் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக மேடையில் அவர்களை மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதில் மூத்த எழுத்தாளர்கள் கலாபன் வாஸ், கோணங்கி, தேச தட்சன், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேலும் தியாகிகளின் வாரிசுகளுக்கு ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.