» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் - ஆணையர் தகவல்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:36:44 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நாளை (ஆக.14) புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த மண்டல முகாமானது வருகின்ற புதன்கிழமை (14.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, மேற்படி தினத்தில் மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 15 முதல் 19,30 முதல் 37,42,44 மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்கள்50,51 மட்டும்) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. 

மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளிக்கலாம். எனவே, மேற்படி முகாம்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர்தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SHANMUGA SUNDARAMAug 13, 2024 - 03:15:59 PM | Posted IP 162.1*****

Excellent Scheme for speedy redressel of Grievances

KumarAug 13, 2024 - 12:49:33 PM | Posted IP 172.7*****

கீழசண்முகபுரம் பகுதிக்கு அதிகாரிகளை இருசக்கரவாகனத்தில் பயணம் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory