» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை : 2பேர் கைது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:30:12 AM (IST)
தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கே.வி.கே நகரை சேர்ந்த ஞானமணி மகன் வேல்சாமி (30) மற்றும் போல்பேட்டை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் அபிஷாந்த் (19) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் வேல்சாமி மற்றும் அபிஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காமல் மோசடி:
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)
