» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு விழா
ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 6:10:29 PM (IST)
தாளமுத்துநகரில் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் முன்னிலையில், சண்முகையா எம்.எல்.ஏ., மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி நூலகத்தை பார்வையிட்டு நல்ல முறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பராமாிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.