» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி : அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி!

ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 5:53:27 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் உள்ள கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி வீட்டு உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது உறவினர் மாரிமுத்து ஆகியோர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நேரு காலனி அருகே உள்ள ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது வீட்டில் 18 அடி ஆழமுள்ள உரை கிணறு இருந்துள்ளது இந்த கிணறு வெகு நாளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் கணேசன் தனது உறவினர் மாரிமுத்து உடன் சேர்ந்து கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கிணற்றில் வாலி ஒன்று தவறி விழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கணேசன் வாலியை எடுப்பதற்காக கிணற்றில் கயிறை கட்டி இறங்கி உள்ளார். ஆனால் கிணற்றில் விஷவாயு உருவாகி இருந்துள்ளது. இதில், கிணற்றில் இறங்கிய கணேசன் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்து கிணற்றில் உள்ளே சிக்கியுள்ளார். இதை எடுத்து மேலே இருந்த மாரிமுத்து கணேசனை மீட்க கிணற்றில் இறங்கியுள்ளார். இதில் மாரிமுத்தும் விஷவாயு தாக்கி அங்கே மயக்கம் அடைந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து அங்கே இருந்த கணேசன் உறவினர்கள் இரண்டு பேர் உள்ளே சென்ற மேலே வராததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதை பார்த்து அருகில் இருந்த சேசுராஜ் மற்றும் பவித்திரன் ஆகியோர் கிணற்றில் மயக்கம் அடைந்து இருந்தவர்களை மீட்க இறங்கி உள்ளனர். இதில் ஜேசுராஜ் மற்றும் பவித்ரன் ஆகியோருக்கு விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் மேலே வந்து மயக்கம் அடைந்தனர். 

இதைய‌டுத்து அருகில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்த பவித்ரன் மற்றும் சேசுராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வீரர் ஆனந்தை கயிறு மூலம் உள்ளே இறக்கி உள்ளே மயங்கி இருந்த மயங்கிய நிலையில் இருந்த கணேசன் மற்றும் மாரிமுத்து மேலே மீட்டுக் கொண்டு வந்தனர். ஆனால் இருவரும் ஏற்கனவே விஷவாயு தாக்கியதில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. 

இதை அடுத்து உயிரிழந்த கணேசன் மற்றும் மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கிணற்றில் விஷவாயுத்தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory