» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புது வாழ்வு சங்கம் சார்பில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா!

ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 5:43:04 PM (IST)



நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் மற்றும் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இணைந்து ஆனந்தபுரம் அருகில் உள்ள கருவேலம்பாடு கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு மேல் நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் மற்றும் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இணைந்து ஆனந்தபுரம் அருகில் உள்ள கருவேலம்பாடு கிராமத்தில் 60,000  லிட்டர் கொள்ள ளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா கருவேலம்பாடு கிரா மத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

விழாவிற்கு கருவேலம்பாடு ஊராட்சி மன்றத் தலைவர் இ.நயினார் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ச.ஜனகர் முன்னிலை வகித்தார். மேல்நிலை குடி நீர்த்தேக்க தொட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனரும், புது வாழ்வு சங்க நிறுவனருமான சகோ.மோகன் சி. லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory