» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊதியச் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் : தொழிலாளர் நலஆணையரிடம் கோரிக்கை

புதன் 10, ஜூலை 2024 4:07:46 PM (IST)



உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியம் வழங்க தக்க நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர் நலஆணையரிடம் ஏஐடியுசி சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து 12,625 ஊராட்சிகளிலும் குறைந்தபட்ச ஊதிய அமலாக்க அதிகாரிகள் ஆய்வு செய்து குறைந்த பட்ச ஊதியத்திற்கும் குறையாத ஊதியம் அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து நிலுவைத் தொகையுடன், ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி சங்கம் சார்பாக தூத்துக்குடி தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஏஐடியுசி மாவட்டத்தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் லோகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பாலசிங்கம், சேது, தனலெட்சுமி, ஞானசேகர், மனோன்மணி, கே.பி.முருகன், அசோகன், ரவி, தாமரைசெல்வன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!

திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory