» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

புதன் 10, ஜூலை 2024 3:58:06 PM (IST)

தூத்துக்குடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் ஏரல் பகுதியைச் சேர்ந்த சந்திரா தியேட்டர் உரிமையாளரான அருண் என்பவருக்கு சொந்தமான நட்டாத்திபகுதியில் உள்ள 20 ஏக்கர் தோட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். சந்திரசேகருடன் தோட்டத்தில் மேலாளராக கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் வன்னியனூர் பகுதியைச் சேர்ந்த வன்னியராஜ் உள்ளிட்ட 5பேர் வேலை பார்த்து வந்துள்ளனர் 

இந்நிலையில் மேலாளர் பார்த்தசாரதி மற்றும் வன்னியராஜ் ஆகியோர் தோட்டத்தில் உள்ள ஆடு மற்றும் மாடுகளை  உரிமையாளர் அருணுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த திருட்டு தொடர்பாக சந்திரசேகர் தோட்ட உரிமையாளர் அருனிடம் தகவல் தெரிவிப்பதாக மேலாளர் பார்த்தசாரதியிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக இருவர் இடையேயும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தில் வேலைக்கு சென்ற சந்திரசேகர் தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சாயர்புரம் காவல்துறையினர் சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரயாத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

இந்நிலையில் சந்திரசேகரின் உறவினர்கள் சந்திரசேகரை வெட்டி கொலை செய்தது தோட்ட மேலாளர் பார்த்தசாரதி மற்றும் வன்னியராஜ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் மேலும் சந்திர சேகருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சந்திரசேகர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


மக்கள் கருத்து

LingamJul 11, 2024 - 10:10:26 AM | Posted IP 162.1*****

10/07/2024 2.45 mutuayapuram bike accident news varala enna News waste local news

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory