» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.22.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!

புதன் 10, ஜூலை 2024 3:08:52 PM (IST)




மெஞ்ஞானபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ.22.74 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் கிராமத்தில் இன்று (10.07.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 60 பயனாளிகளுக்கு பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருமண உதவித்தொகை மற்றும் நிவாரணத்தொகை ரூ.77500 பெறுவதற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் / மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2905 மதிப்பில் இடுபொருட்களையும், 

மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க 1 பயனாளிக்கு ரூ.5.48 இலட்சம் மானியத்துடன் ரூ.21.94 லட்சம் மதிப்பில் கடனுதவியையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 1 பயனாளிக்கு தர்பூசணி விதைகள் மற்றும் இடுபொருள் என மொத்தம் 69 பயனாளிகளுக்;கு ரூ.22,74,405 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒரு கடைக்கோடி கிராமத்தினை தேர்வு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து அவர்களுக்குரிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்பதற்காக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் அரசின் திட்டங்கள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், 14 வகையான கல்வி உபகரணங்கள், கற்றலின் இடைவெளியை சரிசெய்வதற்கான இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், கண்ணொளி திட்டம், இடைநிற்றலை தடுப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை போன்ற துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களாகிய நீங்கள் பள்ளி கல்வியை முடித்து கல்லூரி படிப்பை கண்டிப்பாக படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்;தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழு; மாதந்;தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கென தொழிற்கல்லூரியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று அரசு பள்ளிகளில் பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்;தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஆகையால் மாணவர் சமுதாயம் இதனை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பெண் சமுதாயம் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மகளிர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் திட்டம், வேளாண் உபகரணங்கள் வழங்கும் திட்டம், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் இப்பகுதி விவசாயிகள் மேற்கண்ட துறைகளை நாடி தங்களுக்கு தேவையான திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். கறவை மாடு வளர்ப்பதற்கு தீவனம் இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் அண்ணல் அம்பேத்கர் திட்டம் மூலமாகவும் மானியத்தில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
இம்முகாமில் பொதுமக்கள் ஒவ்வொ

ருவரும் எந்தெந்த துறைகள் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு துறைகள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துத்தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு அரசு திட்டங்கள் இருக்கின்றன. ஆகையால் வருகை தந்துள்ள அனைத்துத்தரப்பு மக்களும் அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். அரசின் திட்டங்களை கிராம சபைகளில் தொடர்ந்து பேசி தெரிந்துகொண்டால்தான் பயன்களை பெற முடியும்.

தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் "மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 டிசம்பர் 18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்கள். "மக்களுடன் முதல்வர்"’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு, 

முதற்கட்டமாக வரும் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் "மக்களுடன் முதல்வர்” திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. "மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் நடத்தப்பட்டு முடிவுற்றதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்கள் வருகின்ற 11.07.2024 முதல் நடைபெறவுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள 12 வட்டாரங்களில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயனடையும் வகையில் அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து மொத்தம் 70 முகாம்கள் நடைபெறவுள்ளதைத்தொடர்ந்து மெஞ்ஞானபுரத்தில் வருகிற 26ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

முன்னதாக இம்முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துதுறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஹபிபூர்ரகுமான், திருச்செந்தூர் வட்டாட்சியர் அ.பாலசுந்தரம், மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் P.கிருபா ராஜ பிரபு, உட்பட பல்வேறு துறை சார்ந்த மாவட்ட நிலையிலான அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory