» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜர்!

புதன் 10, ஜூலை 2024 12:46:34 PM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக தூத்துக்குடி  நீதிமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜராகி உள்ளார். 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, தம்பிகள், மகன்கள் உள்ளிட்ட 7 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஐயப்பன் தலைமையில் வந்தது இன்று வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைப்பில் அவரது மகன்கள் அனந்தர ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இந்த வழக்கில் மூன்று சாட்சிகள் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அனுமதி வழங்கியது தொடர்பாக வழக்கு விசாரணைக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜராகி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory