» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை துவங்குகிறது!

புதன் 10, ஜூலை 2024 12:29:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் 11.07.2024 முதல் 13.08.2024 வரை ‘மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் 72 இடங்களில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொது மக்களுக்கும், பொருளாதார விளிம்பு நிலையில் வசிக்கும் மக்களுக்கும், அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தை விரிவுபடுத்தி ஊரகப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்திடும் வண்ணம் 11.07.2024 முதல் ஊரகப் பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்திட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் (403 கிராம ஊராட்சிப் பகுதிகளிலும்) அருகருகே உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து 20,000 மக்கள் தொகைக்கு ஒரு சிறப்பு முகாம் நடத்திடும் வகையில் வரும் 11.07.2024 முதல் 13.08.2024 வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் 72 இடங்களில் நடைபெறவுள்ளது.

மாண்புமிகு முதல்வர் அவர்களால் இத்திட்டம் துவங்கி வைக்கப்படும் நாளான 11.07.2024 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஐந்து இடங்களில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 44 வகையான சேவைகளை பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம். இம்முகாம்களில் பெறப்படும் கோரிக்கைகளுக்கு மனுக்கள் பெற்ற 30 தினங்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.

எனவே தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளைப் பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் நடத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

விடியல்Jul 11, 2024 - 06:12:19 PM | Posted IP 162.1*****

நாடக கம்பெனி அப்படிதான்

GUNASEKARJul 10, 2024 - 10:20:45 PM | Posted IP 172.7*****

ஒரு பொரோஜனம் கிடையாது சும்மா கன் துடைப்பு எல்லாமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory