» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் நிலை தடுமாறி விபத்து: வாலிபர் பலி!
செவ்வாய் 9, ஜூலை 2024 11:33:28 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி சென்றபோது வல்லநாடு அருகே பைக் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால் தொத்தி கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரி பாண்டியன் (39). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் வேலைக்காக பைக்கில் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.
வல்லநாடு அருகே உள்ள ஒரு கல்லூரி அருகே போகும் போது திடீரென பைக் நிலை தருமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.