» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை!
திங்கள் 8, ஜூலை 2024 11:56:50 AM (IST)
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இராமசந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இராமசந்திரபுரம் (வாகைகுளம்) விமான நிலையம் சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது விமானம் நிலையம் விரிவாக்கத்திற்கு சுமார் 600 ஏக்கர் நிலம் முதலில் கையகப்படுத்தப்பட்டது. மேலும் தற்சமயம் சுமார் 100 ஏக்கர் நிலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கப்பட்டு விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி ஒன்றிய பகுதியான முடிவைதானேந்தல் பஞ்சாயத்து, கட்டாலங்குளம் பஞ்சாயத்து, சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து, குமாரகிரி பஞ்சாயத்து ஆகிய ஊர்களில் நிலம் கையகப்படுகிறது. ஆகவே இராமசந்திரபுரம் (வாகைகுளம்) விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நில உரிமையாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று காேரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
VasanthiJul 8, 2024 - 09:06:38 PM | Posted IP 172.7*****
நிலம் இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு வேலை கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்.
VasanthiJul 8, 2024 - 09:06:38 PM | Posted IP 162.1*****
நிலம் இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு வேலை கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்.
VasanthiJul 8, 2024 - 09:06:38 PM | Posted IP 172.7*****