» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திராவிட மாடல் ஆட்சியில் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகரிப்பு : பாஜக பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு!
செவ்வாய் 25, ஜூன் 2024 12:56:19 PM (IST)

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை அதிகரித்துவிட்டதாக பாஜக பொதுச் செயலாளர் முருகானந்தம் குற்றம்சாட்டினார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தூத்துக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் சாராய மாடல் ஆட்சி நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்த 60பேர் இறந்துள்ளனர். 30பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாவுகளுக்கு காவல்துறை கவனித்துவரும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். கலாத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின்னர் போலீசார் ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாரயத்தை அழிக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கள்ளச் சாரய விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்க பார்க்கிறார்கள். சாராய வருவாய் மூலம் திமுக தேர்தல் செலவு செய்கிறது. கள்ளச்சாரயம், கஞ்சா குறித்து பாஜக மாநில தலைவர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பெட்டிக் கடையில் கூட கஞ்சா விற்கப்படுகிறது. பள்ளி சிறுவர்களை கஞ்சா வியாபாரிகள் ஏஜென்டுகளாக பயன்படுத்துகிறார்கள் பெற்றோர்கள், விழிப்புடன் இருந்து குழந்தைகளை காப்பாற்றிகொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் சித்ராகங்கன், சென்னகேசவன், கட்சி பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, சசிகலா புஷ்பா, விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காமல் மோசடி:
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)

ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!
செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)
