» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி : மேயர் ஆய்வு!
திங்கள் 24, ஜூன் 2024 4:56:21 PM (IST)
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், ஆதிபராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற புதிய தார் சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.