» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்ப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி

திங்கள் 24, ஜூன் 2024 11:27:11 AM (IST)தூத்துக்குடி மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பசுமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் புதிய மாநகராட்சி அலுவலத்தில் இருந்த பழமையான வேப்ப மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் எந்திரம் மூலம் வெட்டியுள்ளனர். மாநகராட்சி அலுவலகம் கட்டப்படுவதற்கு முன்பாக பழைய வண்டிப் பேட்டையாக இருந்த காலத்தில் இருந்த அந்த மரம் அங்கு இருந்துள்ளது. மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்கள் இளைப்பாறும் வகையில் இருந்த நிழல் தரும் மரமாக அது விளங்கியது. 

மரம் வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி முகப்பு பகுதியில் தேசியக் கொடியை மறைப்பதாக உள்ளதால் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மரம் முழுமையாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதாக பசுமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

StalinJun 26, 2024 - 05:52:57 PM | Posted IP 162.1*****

Tmk apditha pannuvanka.

m.sundaramJun 25, 2024 - 09:21:36 PM | Posted IP 172.7*****

It is Dravida Model

மனசாட்சிJun 25, 2024 - 03:56:07 PM | Posted IP 162.1*****

ஒரு மரம் உங்கள் அலுவலகத்தை மறைச்சிருச்சோ..‌அது உங்களுக்கு கொடுத்த சுத்தமான ஆக்ஸிஜன் இனிமே கிடைக்காது... ஆக்ஸிஜனால நீங்க வாழல..பணம் பணம் மட்டும் தான்..

அதானேJun 25, 2024 - 02:46:03 PM | Posted IP 172.7*****

மாநகராட்சில அதிகாரி முதல் கீழ் வேலைபார்க்கிறவங்களுக்கு அறிவு இல்லை, என்ன சொன்னாலும் தலையாட்டிட்டு செய்வானுங்க , இடிக்க சொன்னாலும் தலையாட்டிட்டு செய்வானுங்க ஹி ஹி ஹி

அறிவுJun 25, 2024 - 08:31:28 AM | Posted IP 172.7*****

இருந்தால் வெட்டி இருக்க மாட்டானுவ

மரம் நாட்டுக்கு முக்கியம்Jun 24, 2024 - 09:35:49 PM | Posted IP 172.7*****

யாருடா அந்த முட்டாள் அதிகாரிகள்?

Ramar Brayantnagar tuticorinJun 24, 2024 - 06:03:00 PM | Posted IP 172.7*****

மரம் வளர்ப்போம் மழை பெருவோம் !! உபதேசம் ஊருக்குத்தான் !!

ImmanuelJun 24, 2024 - 05:45:05 PM | Posted IP 162.1*****

தவறான கருத்து மரம் வெட்டியது மிகவும் தவறு ஆனால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்கள் இளைப்பாறும் வகையில் இருந்த நிழல் தரும் மரமாக அது விளங்கியது என்பது தவறான கருத்து இது அங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஏனென்றால் அங்கே உட்கார யாரும் அனுமதிக்கப் படவில்லை.

கேள்வி கேப்பவன்Jun 24, 2024 - 12:49:04 PM | Posted IP 172.7*****

"ALL CAN TRUST" அந்த குரூப் எங்கே டா?? குப்புற படுத்துட்டாங்களா?

இயற்கை ஆர்வலர்Jun 24, 2024 - 12:46:24 PM | Posted IP 172.7*****

இவனுங்க ஒருபக்கம் "மாசு இல்லாத மாநகரை உருவாக்க ஓத்துழைக்க வேண்டும்" என்று கூறுவார்கள், இன்னொரு பக்கம் வெட்டி விடுவார்கள் இரட்டை வேடம் போடுவார்ப்ல

மாநகராட்சி பயலுகJun 24, 2024 - 11:35:56 AM | Posted IP 172.7*****

எல்லாம் பூரா துட்டு முட்டா பயலுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory