» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

திங்கள் 24, ஜூன் 2024 11:14:40 AM (IST)கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர்  பலியானார்.  மேலும் ஏராளமான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜ் முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மண்டல செயலாளர்கள் முருகன், பொன்ராஜ் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்தும் முதல்வர் ஸ்டாலின் உடனே பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து சுமார் 15 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory