» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாசு இல்லாத மாநகரை உருவாக்க ஓத்துழைக்க வேண்டும் : மேயர் வேண்டுகோள்

திங்கள் 24, ஜூன் 2024 10:04:54 AM (IST)தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தார். 

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமியின் 7ம்ஆண்டு நினைவு நாளையொட்டி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் அண்ணாநகர் 6வது தெரு மேற்கு பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில் "மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் அனைவரும் வீட்டுக்கு ஓரு மரம் கட்டாயம் வளர்க்க வேண்டும். மாநகர பகுதி முழுவதும் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 2லட்சம் மரக்கன்றுகள் நடுவது நெகிழி இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பான்ஸர்கள் மூலம் 5 லட்சம் துணி பை வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டு பணிகள்  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு அனைவரும் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
 
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், கவுன்சிலர் கனகராஜ், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி தலைவர் பிரபாகர், துைண அமைப்பாளர் மகேஸ்வரசிங், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மற்றும் செந்தில், ஜெயபாண்டி, விக்னேஷ், ராஜன், பிரைட், அன்னராஜ், ஆசீா், ஜெயராஜ், முருகன், ஜெயபால், மாரி, முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

makkalJun 24, 2024 - 07:40:08 PM | Posted IP 162.1*****

ஹி ஹி ஹி ஹி ஹி 😁😁

ManithanJun 24, 2024 - 01:47:56 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்ப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி திங்கள் 24, ஜூன் 2024 11:27:11 AM (IST)

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory