» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி காமராஜ் கல்லூாியில் இளையோா் இலக்கியப் பயிற்சி பாசறை
ஞாயிறு 23, ஜூன் 2024 11:10:27 AM (IST)
தூத்துக்குடி காமராஜ் கல்லூாியில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் இளையோா் இலக்கியப் பயிற்சி பாசறை நடைபெற்றது.
மாநில ஒருங்கினைப்பு அலுவலா் கவிஞா் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இணைப் பேராசிாியா் சிவபாக்கியம் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளா் வரவேற்புரை ஆற்றினாா். கவிஞா் நெல்லை ஜெயந்தா ஒருங்கினைப்பு அலுவலா் நோக்கவுரை ஆற்றினாா். காமராஜ் கல்லூாி முதல்வா் பூங்கொடி வாழ்த்துரை வழங்கினாா்.
செம்மொழித் தமிழின் சிறப்பு என்ற தலைப்பில் ஏபிசி மகாலெட்சுமி மகளிா் கல்லூாி முதல்வா் சுப்புலெட்சுமி பேசினாா். மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும் என்ற தலைப்பில் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூாி இணைப்பேராசிாியா் சூா்யலெட்சுமி, பேசினாா். புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும் என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிாியர் கவிஞா் ஜெயந்த பேசினாா்.
நாடகத்திலும் திரையிலும் நடந்த நமிழ் என்ற தலைப்பில் அகில இந்திய வாணொலி நியம்லை சந்திரபுஷ்பம் பேசினாா். கண்களைத் திறந்த கதை உலகம் என்ற தலைப்பில் இராஜேஸ்வாி உதவி பேராசிாியா் காமராஜ் கல்லூாி பேசினாா். அன்னைத் தமிழ் வளா்த்த அறிஞா்களும் தலைவா்களும் என்ற தலைப்பில் காருண்யா இணைப் பேராசிாியா் பேசினாா்.
தொடா்ந்து பாசறையில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் கருத்துக்களைப் பேசினாா்கள். நிறைவாக அனைவருக்கும் சாண்றிதழ் வழங்கப்பட்டன கவிஞா் நெல்லை ஜெயந்தா அவா்களின் புத்தகம் ஒன்று பாிசாக வழங்கப்பட்டது . பல்வேறு கல்லூாியில் இருந்து 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்
RajaJun 24, 2024 - 04:28:56 PM | Posted IP 162.1*****