» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடிகர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

சனி 22, ஜூன் 2024 10:29:52 AM (IST)நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவிலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து தனது பிறந்த நாளை எளிய முறையில் கொண்டாட தனது கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில் தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜோசப் விஜய் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் 2026ஆம் ஆண்டு விஜய் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

மாரிமுத்துJun 22, 2024 - 07:56:22 PM | Posted IP 172.7*****

லயண்ஸ்டவுண் ஆக்னல் அண்ணா நீங்க எல்லா கட்சியிலும் இருக்கிங்க😂😂

TAMILANJun 22, 2024 - 02:56:09 PM | Posted IP 162.1*****

ஒரு நியாயம் வேண்டாமா ? அவனே ஒரு மிஷனரி , அவனுக்காக இது தேவையா? எப்போது உங்களுக்கு புரியும்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory