» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
வெள்ளி 21, ஜூன் 2024 10:07:41 AM (IST)
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 29 தேசிய மாணவர் படை சார்பில் இன்று காலை 10-ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அலுவலர் பிரதோஷ் தலைமை வகித்தார். ஜெயபிரியா யோகா பயிற்சிளித்தார். யோகா நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த 350 மாணவர் மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இதைபோன்று பள்ளி கல்லூரிகளிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.