» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் புதிய மின் நிலையம் திறப்பு
வியாழன் 20, ஜூன் 2024 7:57:01 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதியதாக மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 300 கோடியில் நடைபெற்றுவரும் பெருந்திட்ட வளாகப்பணிகளின் ஒரு பகுதியாக புதிய மின் நிலையம் இடும்பன் கோயில் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் நிலையத்தின் செயல்பாட்டை அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோயில் மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணதாஸ், செயற்பொறியாளர் முருகன், ஹெச்.சி.எல். மேலாளர் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.