» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் : பாஜக கோரிக்கை!!

புதன் 19, ஜூன் 2024 5:25:29 PM (IST)மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லவிருக்கும் வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏவிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர், சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி இந்தியாவில் அதிக அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இடங்களிலொன்றாகவும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்திசெய்யப்படும் உப்பானது வெளிநாடு மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்குவதால் வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பிறபகுதிகளுக்கு மீன்கள் இங்கிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இத்தகைய வணிக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதைப்போல் பெங்களூரில் உள்ள ஜ.டி. நிறுவனங்களில் தென் தமிழகத்தைச் சார்ந்த இளம் தலைமுறையினர் பணியாற்றி வருகின்றனர். 

மேலும் உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் மற்றும் பனிமயமாதா ஆலயத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் பயணத்தை எளிதாக்கும் வண்ணம் தற்போது மதுரையில் பெங்களுரு வரையில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் இரயில் சேவையை தூத்துக்குடி மாவட்டம் வரை நீட்டிக்க பாரதப்பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

UNMAIJun 19, 2024 - 07:03:08 PM | Posted IP 172.7*****

kootammaaga varaveendam, katupadutha mudiyavilai. oru 10 peer vanthaal poothum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory