» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது!
புதன் 19, ஜூன் 2024 4:50:49 PM (IST)
திருச்செந்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்செந்தூரில் உள்ள ஒரு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த பாபு ஜான் மகன் ஜான் பாட்ஷா (25) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நன்னீர் மீன்வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் : மீன்வளக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 5:36:34 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)
