» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சீற்றம் : மீன்வளத் துறை எச்சரிக்கை!

புதன் 19, ஜூன் 2024 4:38:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று மின்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் (மீன்பிடித்துறைமுக மேலாண்மை) தி.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 19.06.2024 முதல் 23.06.2024 வரையிலான தினங்களில் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 35-45 கி.மீ வேகத்துடன் வீசக்கூடிய காற்றானது இடையிடையே 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 20.06.2024 அன்று இரவு 11.30 மணிவரையிலான காலங்களில் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியான வேம்பார் முதல் பெரியதாழை வரை அலைகளின் சீற்றமானது 2.1 மீட்டர் முதல் 2.2 மீட்டர் நீளம் வரை எழக்கூடும் என்று கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory