» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இறால் வளர்ப்பில் சுகாதார மேலாண்மை கருத்துப்பட்டறை!
புதன் 19, ஜூன் 2024 3:56:51 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இறால் வளர்ப்பில் சுகாதார மேலாண்மை பற்றிய நாடளாவிய கருத்துப்பட்டறை நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாடளாவிய கருத்துப்பட்டறை நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் "பெர்ல் அக்வா” என்பது தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை திட்டமாகும். இந்த ஆண்டிற்கான கருத்துப்பட்டறையின் கருப்பொருள் "இறால் வளர்ப்பில் சுகாதார மேலாண்மை – தற்போதைய போக்குகள் மற்றும் பார்வைகள்/கண்ணோட்டம் ஆகும்.
உதவிப் பேராசிரியரும் அமைப்புச் செயலாளருமான கே. என். விஜய் அமிர்தராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் தனது தலைமை உரையில், நாடளாவிய கருத்துப்பட்டறையை ஏற்பாடு செய்ததற்காக மீன் நோயியல் மற்றும் சுகாதார மேலாண்மைத் துறை பேராசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை திட்டமான "பெர்ல் அக்வாவின்” முக்கியதுவத்தைப் பற்றியும் பேசினார்.
இவ்வகை கருத்துப்பட்டறையானது 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இறால் வளர்ப்பில் நோயினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை உணர்ந்து இறால் வளர்ப்பில் நோய் மற்றும் சுகாதார மேலாண்மைக்கு இந்த ஆண்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இறால் வளர்ப்புத் தொழிலைச் சேர்ந்த மூன்று போரும் இக்கருத்துப்பட்டறையில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி அக்ஷய பணிகிரஹி, மரக்காணம் அமேசிங் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பொது மேலாளர் வினு எஸ். சிவா, சென்னை ஷெங்லாங் பயோடெக் மற்றும் பான் இந்தியா தொழில்நுட்ப சேவைத் தலைவர் குமரேசன் மற்றும் விஜயவாடா தீபக் நெக்ஸ்ஜென் பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் வி. ஆர். மான்சிங் முதலியோர் கலந்து கொண்டு இறால் வளர்ப்பில் சுகாதார மேலாண்மை, சிறந்த மேலாண்மை நடைமுறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் கண்காணிப்பு, நலநுண்ணியிரிகள் மற்றும் நோய் தடுப்பு திறன் ஊக்கிகளின் பங்கு மற்றும் சுகாதார கண்காணிப்பு திட்டங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினர்.
உதவிப் பேராசிரியரும் அமைப்புச் செயலாளருமான ப. சிவசங்கர் நன்றியுரை வழங்கினார். பா. கிறிசோலைட், இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் இக்கருத்துப்பட்டறையை ஒருங்கிணைத்தார். ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள், பண்ணை தொழல்நுட்ப வல்லுநர்கள், இறால் பண்ணையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இக்கருத்துப்பட்டறையில் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)
