» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீவிபத்து : ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
செவ்வாய் 18, ஜூன் 2024 7:54:42 AM (IST)
தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் குரூஸ் மொராயிஸ் மகன் டட்லி (67). இவர் நியூ சோபியா சவுண்ட் என்ற சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி அல்பர்ட் அன்கோ அருகில் உள்ள இவரது குடோனில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி நகரம், சிப்காட் பகுதியிலிருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், தீவிபத்தில் சவுண்ட் சர்வீஸ் பொருட்கள், டெக்கரேசன் பொருட்கள் உட்பட சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.