» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி விழா
வெள்ளி 14, ஜூன் 2024 6:00:01 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் 69வது கல்லூரி விழா இன்று வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரியின் முதல்வர் த.கனகராஜ் வரவேற்புரை மற்றும் ஆண்டு நிகழ்வு அறிக்கையை வழங்கினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மு.சுப்புலட்சுமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், கல்வியின் சிறப்பு மற்றும் ஆசிரியருக்கான இலக்கணங்கள் குறித்து கருத்துரை வழங்கினார். மேலும் செயல்திறனை மேம்படுத்த மாணவ-ஆசிரியர்கள் வலுவான ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதோடு அன்பு, அறிவு, அறம் சார் விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டவர்களாகத் திகழவேண்டும் என்று கூறினார்.
அவரது உரையைத் தொடர்ந்து கற்றலில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கி கௌரவித்தார். கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கவின் கலைகள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினரால் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்சிகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. பின் கல்லூரியின் மாணவத் தலைவர் ஜோதிலெட்சுமி நன்றியுரை வழங்கினார். விழாவினை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ-ஆசிரியர்கள் முதல்வரி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

V.O.C. College of EducationJun 28, 2024 - 12:28:00 PM | Posted IP 172.7*****