» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடம்பா மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்

செவ்வாய் 21, நவம்பர் 2023 7:45:11 PM (IST)



கடம்பா மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட வன அலுவலர் துவக்கி வைத்தார்.

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும்  அங்கமங்கலம் பஞ்., சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஒரு லட்சம் பனைமர விதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. 

அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி எதிரே நடந்த விழாவில் மதர் சமூக சேவை நிறுவனம் இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை வகித்தார். அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றார். தொழிலதிபர் செல்வகுமார், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கடம்பா மறுகால் ஓடை கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார். இதில் அங்கமங்கலம் பஞ்., செயலாளர் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குனர் ஜென்சி, பணித்தள பொறுப்பாளர் கஸ்தூரி, பரமேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory