» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன் வளக்கல்லூயில் உலக மீன் வள தினம்

செவ்வாய் 21, நவம்பர் 2023 4:53:15 PM (IST)



தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் உலக மீன் வள தினம் இன்று கொண்டாடப்பட்டது.

தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் வளர்ப்பு துறை மூலமாக "உலக மீன் வள தினம்” சிறப்பாக கொண்டாடும் விதமாக பள்ளி மாணவ – மாணவிகளிடையே விழிர்ப்புணர்வு உரை 21.11.2023 அன்று அளிக்கப்பட்டது.

மீன் வளர்ப்பு துறை பேராசிரியர் மற்றும் தலைவர், சா. ஆதித்தன், தனது உரையில் உலக மீன்வள தினத்தை கொண்டாடுவதின் முக்கியத்துவத்தை; வளங்குன்றா மீன் வள மேலாண்மை முறைகள் பின் பற்றப்படாததால் நன்னீர் மற்றும் கடல்சார் வளங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன என்றும் மீனவ சமுதாயம் மற்றும் இளைஞர்களிடையே மீன் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு இருத்தல் வேண்டும் என்றும் விரிவாக எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் உலக மீன்வள தினத்திற்கான உறுதி மொழியை பள்ளி மாணவர்கள் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital











Thoothukudi Business Directory