» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 21, நவம்பர் 2023 3:30:08 PM (IST)

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்காக வழங்கப்படும்  அவ்வையார் விருது  பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் கருத்துரு அனுப்பலாம்  என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2024ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு அவ்வையார் விருது, 8கிராம்(22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம்,  ருபாய் 1 இலட்சத்திற்கான காசோலை, சான்று  மற்றும் சால்வை வழங்கப்படும் என ஆணை பெறப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் ஆகிய  தகுதியுடையோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.12.2023க்குள் விண்ணப்பம் செய்த பின் விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் குறித்து  1 பக்க அளவில் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில் (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet-2) (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் Passport Size Photo உடன் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள: 10.12.2023-க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி தொலைப்பேசி எண்:0461-2325606 என்ற முகவரியில் சமர்ப்பிக்கும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory